Monday, July 09, 2007

விவாகரத்து சர்ச்சை.

05. தபால் மூலம் "தலாக்' முஸ்லிம் பெண் சர்ச்சை

டாங்க் (ராஜஸ்தான்): முஸ்லிம் மதத்தினரில் பெண்கள் விவாகரத்து கோருவது மிக அரிது. அதிலும் தபால் மூலம் "தலாக்' அனுப்பி, விவாகரத்து பெறுவது அரிதிலும் அரிது. அப்படி தபாலில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ராஜஸ்தான் பெண் ஒருவர்.

ராஜஸ்தானில் உள்ள டாங்க் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஹசீனா. இவரது கணவர் முகமது ஷரீப். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்த கணவரை சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். கேட்டபோதெல்லாம் பிறந்த வீட்டில் இருந்து பணம் பெற்று தந்தார். மீண்டும் ஒரு லட்ச ரூபாய் வாங்கி வரும்படி, ஹசீனாவை அடித்து உதைத்துள்ளார் ஷரீப். ஆவேசமடைந்த ஹசீனா, தனது பிறந்த
வீட்டில் இருந்து, தபால் மூலம் கணவருக்கு "தலாக்' நோட்டீஸ் அனுப்பிவிட்டார். ஆனால், இந்த விவாகரத்தை ஏற்க மறுக்கிறார் ஷரீப். "தவறு செய்வது மனித இயல்பு தான். நான் தவறை திருத்திக் கொள்கிறேன். ஏழு குழந்தைகளுடன் நான் தனியே வசிப்பது முடியாத காரியம். எனக்கு இன்னொரு வாய்ப்பு வேண்டும்' என்று வாதிடுகிறார்.

ஷரீப்புக்கு முஸ்லிம் மத குருக்களும் ஆதரவாக உள்ளனர். முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் மஞ்சூர் அலாம், ""தபால் மூலம் தலாக் நோட்டீஸ் அனுப்பியது சரியானது அல்ல,'' என்று கூறுகிறார். டாங்க், காந்தெனா அமேரியா மசூதியின் மதகுரு உமர் நத்வி, ""ஆண்கள் மட்டுமே இது போன்ற முறையில் "தலாக்' நோட்டீஸ் அனுப்பி விவாகரத்து செய்ய முடியும். பெண்களுக்கு முஸ்லிம் சட்டத்தில் இதுபோன்ற செயல்களுக்கு இடம் இல்லை,'' என்கிறார்.

இது தொடர்பாக இஸ்லாமிய பண்டிதர்களிடம் கேட்ட போது, "பெண்கள் விவாகரத்து கோரும் போது, அதற்கு முஸ்லிம் மதத்தில் சில நிபந்தனைகளும், விதிமுறைகளும் உள்ளன. ஹசீனா விஷயத்தில், அவர் செய்தது சரியானது தானா என்பதை முஸ்லிம் சட்டப்புத்தகத்தை அலசி ஆராய்ந்து தான் முடிவு சொல்ல முடியும்' என்றனர். ஹசீனாவுக்கு
ஆதரவாக அவரது தந்தை உறுதியுடன் உள்ளார். ஹசீனாவும், யார் என்ன சொன்னாலும், இனி ஷரீப்புடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

நன்றிங்க 08.07.07 தினமலர்.

தலாக் எனும் விவாகரத்து செய்து கொள்ளும் சட்டம் கணவன், மனைவி இருவருக்குமே பொதுவானதாக இருக்கிறது. விவாகரத்து செய்து கொள்ளும் முறைகளில் வேண்டுமானால் சற்று வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பொருந்திப் போகவில்லையென்றால் இருவருக்குமே பிரிந்து கொள்ளும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருக்கிறது.

எழுத்து மூலம் விவாகரத்து செய்யக்கூடாது என்று இஸ்லாத்தில் எந்த சட்டமும் இல்லை. ஆனால் எழுத்து மூலம் விவாகரத்தைத் தெரிவிக்கும் முறைக்கு ஒரு நிபந்தனை உண்டு. திருமணத்துக்கு எவ்வாறு இரு சாட்சிகளை ஏற்படுத்திக்கொள்கிறோமோ அதே முறையில் எழுத்து மூலம் தெரிவிக்கும் விவாகரத்துக்கும் இரண்டு சாட்சிகளை ஏற்படுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், தன் கணவரிடமிருந்து பிரிந்து விட வேண்டும் என்பதில் ஹஸீனா உறுதியாக இருக்கும் நிலையில், அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. அவருடைய கணவருடன் சேர்ந்து வாழ வற்புறுத்தும் உரிமையும் எவருக்கும் இல்லை. இஸ்லாம் இதில் தலையிடுவதில்லை.

பெண்கள் குலா முறையில் விவாகரத்து பெற முன் வரும்போது அதை புறக்கணித்து கண்டிப்பாக உன் கணவருடன் நீ வாழ்ந்தாக வேண்டும் என்று சொல்லவும் இஸ்லாமிய மத பண்டிதர்களுக்கும் உரிமை இல்லை. அப்படி உரிமை உள்ளது என்று சொல்ல வருபவர்கள் தமது தரப்பு வாதத்திற்கான ஆதாரங்களை இஸ்லாத்திலிருந்து எடுத்தெழுதலாம்.

தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய படவா முகமது ஷரீபை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Wednesday, July 04, 2007

பத்மலட்சுமி விவாகரத்து செய்கிறார்!

சல்மான் ருஷ்டியை விவாகரத்து செய்கிறார் பத்மலட்சுமி?

லண்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 2 ஜூலை 2007 ( 17:52 IST )

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அவரது மனைவி பத்மலட்சுமி விரைவில் வி வாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (60). இவரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவரும், மாடல் அழகியுமான பத்மலட்சுமியும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

இருவரும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக கலந்துகொண்டனர்.

எனினும், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சல்மான் ருஷ்டியை விவாகரத்து செய்ய பத்மலட்சுமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சல்மான் ருஷ்டியை திருமணம் செய்ததன் மூலம் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டதாகவும், இதனால் விரைவில் முறைப்படி அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தனது நணபர்களிடம் பத்மலட்சுமி கூறியதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றிங்க

விவாகரத்து செய்த கொண்ட மாடல் அழகியை திருமணம் செய்ய பலர் முன் வருவர். விவாகரத்தான ருஷ்டியின் நிலை...???

ஜீவனாம்சம் சம்பள உயர்வா?

விவாகரத்தானவருக்கு சம்பள உயர்வா? மாஜி மனைவிக்கு அதிக ஜீவனாம்சம்

மும்பை: விவாகரத்தான ஆண்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தால், மாஜி மனைவிக்கு ஜீவனாம்ச தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும் என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.விவாகரத்தான ஆண்களுக்கு இனிமேல் சம்பள உயர்வு கிடைத்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்காது. மாஜி மனைவிக்கு இன்னும் அதிகமாக ஜீவனாம்சத்தை கொடுக்க வேண்டுமே என்ற வருத்தம் தான் இருக்கும்.மும்பையைச் சேர்ந்த அரசு ஊழியர் மோகன் ஹரி மோரே .

குடும்பப் பிரச்னையால் அவருக்கும், மனைவி சுஜாதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால், கடந்த 1999ல், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். அப்போது, சுஜாதாவுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஜீவனாம்சமாக மோகன் கொடுக்க வேண்டும் என்று குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மோகன் ஜீவனாம்சம் கொடுத்து வந்தார்.இந்நிலையில், சுஜாதா சமீபத்தில் குடும்பநல கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "என்னை விவாகரத்து செய்த போது, எனது மாஜி கணவருக்கு சம்பளம் ரூ.மூன்று ஆயிரம் மட்டுமே. அத்துடன், அவருடைய வயதான பெற்றோர் அவருடன் இருந்தனர். அவர்களையும் பராமரிக்க வேண்டி இருந்தது. அதனால், அப்போது ஆயிரம் ரூபாய்

தான் ஜீவனாம்சம் தர முடியும் என்று கூறி விட்டார். சில ஆண்டுகள் கடந்த பிறகு, ஐந்தாவது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, எனது மாஜி கணவருக்கு சம்பளம் ரூ.எட்டு ஆயிரமாக உயர்ந்தது. ஆனால், எனக்கு கொடுத்து வந்த ஜீவனாம்ச தொகையை மட்டும் உயர்த்தவில்லை.

மேலும், அவருக்கு சம்பள உயர்வு நடைமுறைக்கு வந்த போது, நிலுவைத் தொகையாக ஆயிரக்கணக்கில் பணம் கிடைத்தது. அவருடைய வயதான பெற்றோரும் இப்போது இறந்து விட்டனர். அதனால், அவருக்கு நிதி நெருக்கடி எதுவும் கிடையாது. எனக்கு கொடுக்கும் ஜீவனாம்சத்தை அதிகரித்து கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார்.அந்த மனுவை விசாரித்த குடும்பநல கோர்ட், "சுஜாதாவுக்கு கொடுக்கும் ஜீவனாம்ச தொகையில், மோகன், இனிமேல் ரூ.500 அதிகமாக கொடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. அதைக் கேட்டு பதறிப் போன மோகன், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

மோகனின் மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜே.என்.பாட்டீல் மற்றும் ஏ.ஏ.சையது அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, "விலைவாசி உயர்ந்து வருவதால் தான் அரசு, மோகனுக்கு சம்பள உயர்வை அளித்தது. அதே போல, விலைவாசி உயர்வு சுஜாதாவுக்கும் உண்டு. அதை சமாளிக்க, அவருக்கு வேறு எந்த ஆதாயமோ அல்லது ஆதரவோ கிடையாது. அதனால், மோகன் அதிகப்படியாக ஊதியம் பெறும் போது, அவருடைய மனைவிக்கும் ஜீவனாம்ச தொகையை ரூ.500 அதிகரித்து தான் கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே கொடுக்கும் ஆயிரம் ரூபாயில், உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ செலவு மற்றும் பிற செலவுகளை சுஜாதா சமாளிக்க முடியாது. அதனால், சுஜாதாவுக்கு இனிமேல் மோகன் ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.ஆயிரத்து 500, கொடுத்து தான் ஆக வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.

நன்றிங்க

சட்டங்களில் இருக்கும் பல ஓட்டைகளில் இது பெரிய ஓட்டை என்று சொல்லலாம்.

மணமுடித்து இல்லற வாழ்வில் தம்பதியராக இணையும் ஆண், பெண் இருவருக்கும் கணவன், மனைவி என்ற உறவு ஏற்படுகிறது. இந்த உறவினால் சுக, துக்கம். லாப. நஷ்டம் என வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் துன்பங்களில் இருவரும் பங்கேற்கிறார்கள்.

கணவனுக்கு மனைவி உதவுவது, மனைவிக்கு கணவன் உதவுவதும் பரஸ்பரம் இருவர் மீதும் கடமை.

திருமணத்திற்கு பின் இருவரும் கருத்து வேறுபாடு கொண்டு இனி கணவன் மனைவியாக இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து விவாகரத்துக்கு செய்து கொண்டு பிரிந்த பின் அவன் யாரோ அவள் யாரோ என்று ஆகிவிடுகிறார்கள்.

இப்படி நீ யாரோ நான் யாரோ என்று பிரிந்த பின்னும் மனைவி என்ற அந்தஸ்தை முற்றாக முறித்துக் கொண்ட பெண்ணுக்கு கொஞ்ச காலம் மனைவியாக இருந்திருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக அவளுக்கு காமெல்லாம் ஜிவனாம்சம் என்ற பெயரில் ஒரு தொகையை கணவனாக இருந்தவன் கொடுத்து வரவேண்டும் என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஆண்களுக்கு இழைக்கப்படும் ஒரு அநீதி.

இங்கே நீதி மன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாக கருதாமல் விவகாரத்து பெற்றுக்கொண்ட ஒரு பெண் இனிமேல் கணவன் என்ற குறுக்கிடு இல்லாமல் தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ள முடியும். திருமணத்திற்கு முன்பு என்ன நிலையோ அதே சுதந்திர நிலையை அந்தப் பெண் பெற்று விடுகிறார்.

இந்த நிலையில் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணுக்கு ஜிவனாம்சம் என்ற பெயரில் மாத மாதம் ஒரு தொகையை கொடுப்பது எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?

உழைப்புக்கு கிடைப்பதே ஊதிய உயர்வு.

விவாகரத்து செய்துகொண்ட பெண் என்ன உழைக்கிறார் என்று அவருக்கும் மாஜி கணவனின் ஊதிய உயர்விலிருந்து பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி நேர்மைப்படுத்த முடியும்?