Showing posts with label கொலை. Show all posts
Showing posts with label கொலை. Show all posts

Saturday, March 29, 2008

கோயில் பசு கருணை கொலை!

லண்டன் கோயில் பசு கருணை கொலை- வழக்கு

சனிக்கிழமை, மார்ச் 29, 2008

இங்கிலாந்தில் கோயில் பசுவை அத்துமீறி கருணைக் கொலை செய்த அமைப்பு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மிகப்பெரிய இந்துக் கோயிலான பக்தி வேதாந்த மேனர் கோயில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் என்ற இடத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் கங்கோத்ரி என்ற 13 வயது பசு இருந்தது.

ஒரு விபத்தில் கங்கோத்ரியின் கால்கள் முறிந்ததால் நிற்க முடியாமல் மாதக்கணக்கில் படுத்தே கிடந்தது. இதனால் அதன் வயிறு மற்றும் முதுகு பகுதியில் புண்கள் ஏற்பட்டு ஆறாத ரணமாகிவிட்டது.

வேதனையால் பரிதாபமான நிலையில் இருந்த கங்கோத்ரியை விஷ ஊசி போட்டு கருணைக் கொலை செய்துவிடலாம் என்று கோயில் நிர்வாகத்திடம் ராயல் சொசைட்டி என்ற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு கோரியது. இதற்கு கோயில் நிர்வாகம் ஒத்துக்கொள்ளவி்ல்லை.

இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 13ம் தேதி கோசாலைக்குள் நுழைந்த ராயல் சொசைட்டியினர் கோயில் பசுவை கருணைக் கொலை செய்தனர்.

இந்த நிலையில் இப்போது ராயல் சொசைட்டி மீது பக்திவேதாந்த மேனர் கோயில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது பற்றி கோயில் நிர்வாகத் தலைவர் கவுரி தாஸ் கூறுகையில்,

கங்கோத்ரியின் கால்களை சரி செய்ய தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. ரணங்களை ஆற்றவும் மருந்து தரப்பட்டது. நன்கு தேறி வந்தது. அதைக் கொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ராயல் சொசைட்டியினர் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து கோயில் பசுவைக் கொன்றுவிட்டனர் என்றார்.

மேலும், கோயில் செய்தி தொடர்பாளர் ராதாமோகன் தாஸ் கூறுகையில், இந்துக்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் இப்படிச் செய்துள்ளனர். இங்கிலாந்தில் இந்துக்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் இது என்றார்.

நடந்த சம்பவத்துக்காக ராயல் சொசைட்டியினர் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது குறித்து அந்த அமைப்பின் இயக்குநர் ஜான் ரோல்ஸ் கூறுகையில்,
நாங்கள் செய்தது சரியென்றே நம்புகிறோம். சட்டப்படி நடந்த இந்த விஷயத்தை அவர்கள் (கோயில் நிர்வாகம்) வேறு கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.

இந்த பிரச்னை திசை திரும்பியிருப்பது வருத்தமளிக்கிறது.
நாங்கள் எப்போதும் பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளித்துதான் நடக்கிறோம். ஆனால் விலங்குகள் இம்சிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்கள் வாதம் என்றார்.

நன்றிங்க

பாவிகளா!
அப்பாவி மனிதர்களை 'போர்' என்ற காரணத்தைச் சொல்லி கருணையேயில்லாமல் கொலைசெய்கிற 'மிருகங்கள்' மீது எந்த வழக்குமில்லையா..?

Saturday, October 06, 2007

02. ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

02.தாய், மகளை கொன்று நகை கொள்ளை ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள்

மதுரை: தாய், மகளை கொன்று பணம், நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை கே.புதுõர் கொடிகுளத்தைச் சேர்ந்தவர் எபிராயிம். இன்ஜினியர். குவைத்தில் பணியாற்றினார். இவரது மனைவி இன்பஜோதி. மகள் எவர்கிரீன் பெலிசிட்டி. தனியாக வசித்து வந்தனர்.

இவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் தாயையும் மகளையும் கொலை செய்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர். ஊமச்சிகுளம் போலீசார் விசாரித்து ஆட்டோ டிரைவர் வேலுச்சாமி உட்பட நான்கு பேரை கைது செய்தனர். மூன்று பேருக்கு ஏற்கனவே இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றொரு குற்றவாளி கதிரவன் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

நன்றிங்க தினமலர், 06/10/2007

இரட்டை ஆயுள் தண்டனை என்றால் எத்தனை வருஷங்க?

...வேஸ்ட்!

Saturday, August 04, 2007

இன்னுமோர் உசிலம்பட்டி!?

ஈரத் துணியில் சுருட்டி...வேலூரில் மாவட்டத்தில்
பெண் சிசு கொலை கொடூரம்!!


ஆகஸ்ட் 04, 2007

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக பிறந்த பெண் சிசுக்களை பெற்றோர்களே கொன்று புதைத்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தைத் தாண்டி யாருக்கும் தெரியாமல் இருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமம் சில ஆண்டுகளுக்கு உலகப் புகழ் பெற்ற கிராமமாக மாறியது. ஏதோ நல்லது செய்தோ அல்லது சாதனை செய்தோ அந்த ஊருக்கு பெருமை கிடைத்து விடவில்லை.

பிறந்த சிசுக்களைக் கொன்று குவிக்கும் கொலைகார குக்கிராமமாக உசிலம்பட்டிக்குப் பெயர் கிடைத்தது. பெண் குழந்தை பிறந்தால் உடனே கள்ளிப் பால் கொடுத்தும், நெற்கதிர்களை தொண்டைக்குழியில் போட்டும் கொன்று புதைக்கும் கொடூரம், காலம் காலமாக உசிலம்பட்டியில் அரங்கேறி வந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அரசுத் தரப்பிலும், தொண்டு நிறுவனங்கள் தரப்பிலும் பல நடவடிக்கைகள் அடுக்கடுக்காக பாய்ந்தன. அதன் பின்னர் சிசுக் கொலை சற்றே அடங்கியது. ஆனால் உசிலம்பட்டியைத் தவிர தர்மபுரி, சேலம் உள்ளிட்ட வேறு சில மாவட்டங்களிலும் இந்தக் கொடூரம் நடப்பது தெரிய வந்தது.

கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியின்போது பெண் சிசுக்களை காக்கும் நோக்குடன் தொட்டில் குழந்தைகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டத்தின் கீழ் பல பெண்கள் அரசுத் தொட்டிலில் விடப்பட்டன

கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் இல்லாமல் இருந்து வந்த பெண் சிசுக் கொலை மீண்டும் தற்போது தலை தூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள பேரணாம்பட்டு என்ற ஊரில் ஒரு பெண்ணுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது.

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் 3வதும் பெண்ணாக பிறந்துள்ளது. இந்த நிலையில், குழந்தை பிறந்த 2வது நாள் இறந்து விட்டதாம்.

சந்தேகமடைந்த அதிகாரிகள் இதுகுறித்து பெற்றோரிடம் கேட்டபோது, ஏதோ தீய சக்தி வந்து குழந்தையை கொன்றுவிட்டது என்றார்களாம். அவர்கள் மட்டுமல்லாது அந்தக் கிராமமே அப்படித்தான் சொல்கிறது.

இதன் பின்னணியில் பெரிய அக்கிரமமே ஒளிந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஈரத் துணியில் சிசு 'சுருட்டல்':

இந்த கிராமங்களில் பெண் குழந்தை பிறந்ததும் அதற்கு தாய்ப்பால் கொடுக்க மாட்டார்களாம். பிறந்து ஒன்றிரண்டு நாட்களே ஆன குழந்தைகளை ஈரத்துணியில் சுருட்டி வைத்து விடுவார்களாம். இந்த கொடூரத்தால், சில மணி நேரங்களிலேயே அந்தப் பச்சிளம் சிசு பரிதாபமாக இறந்து போய் விடும்.

அதன்பின்பு அந்த குழந்தைகளை வீட்டின் பின்புறமோ அல்லது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்தோ புதைத்து விடுவார்களாம்.

தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில்தான் தற்போது பெண் சிசுக் கொலை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2001முதல் 2006 வரை இந்த மாவட்டத்தில் 1612 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன.

இதைத் தடுக்க சமூகநல அதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனராம். ஆனால் இதுவரை அவர்கள் எடுத்த முயற்சிக்கு கிராம மக்கள் யாருமே ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

நன்றிங்க

//இந்த கிராமங்களில் பெண் குழந்தை பிறந்ததும் அதற்கு தாய்ப்பால் கொடுக்க மாட்டார்களாம்.//

என்ன அநியாயமய்யா இது?