Monday, April 30, 2007

தேசியக்கொடி

இந்திய தேசியக் கொடியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பது நம் நாட்டுச் சட்டம்.



"As per the Prevention of Insults to National Honour Act, 1971, not only is this act unethical and insensitive, but it also amounts to an offence with a maximum of three years imprisonment or fine or both.

The Act stipulates, "Whoever in any public place or in any other place within public view burns, mutilates, defaces, defiles, disfigures, destroys, tramples upon or otherwise shows disrespect to or brings into contempt (whether by words, either spoken or written, or by acts) the Indian National Flag or any part thereof, shall be punished with imprisonment for a term which may extend to three years, or with fine, or with both."

நன்றிங்க

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொண்டு வேகமாகத் திரும்பிய டெண்டுல்கர் தேசியக் கொடி போல் செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டிக் கொண்டாடினார்.

டி.வி.வர்ணனையாளர் மந்திரா பேடி உலகக் கோப்பை அணிகளின் நாட்டு கொடியை சேலையாக அணிந்திருந்தார். அவசர அவசரமாக மன்னிப்பு கேட்டு புடவையை மாற்றி விட்டார்.

இதெல்லாத்தையும் விட கொடுமை என்னவென்றால் சமீபத்தில் பா.ஜ.க. விலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சாமியாரினியும் முன்னாள் மத்திய்ப் பிரதேச முதல்வருமான உமா பாரதி, சிலமதாங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தின்போது நம் நாட்டு தேசியக் கொடியில் மூக்கைச் சிந்தியது!

கிரிக்கெட்டின் மூலம் தேசபக்தி வளரும் என்று நம்பும் கூட்டம், யாராவது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட்டில் சப்போர்ட் பண்ணினால் கூட தேவையின்றி சாமியாடும் ஒரு கூட்டம், நம் நாட்டு தேசியக் கொடியை அவமதிக்கும் இத்தகைய இந்துக்களை என்ன செய்யப் போகிறார்கள்?

மந்திரா பேடியையும் டெண்டுல்கரையும் பாகிஸ்தானுக்கு போகச் சொல்வாங்களா? அல்லது சட்டப்படி மூன்று வருடம் சிறைத்தண்டனை பெறுவாங்களா?

கம்பத்தில பறக்கிறவரைக்கும் அது கொடி,






அதையே கீழே விரிச்சிட்டா...???

பட உதவிக்கு நன்றிங்க.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.

முஸ்லீம்கள் பணத்தில் படித்து முஸ்லீம்களை வேட்டையாடிய 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்'

ஏப்ரல் 30, 2007

அகமதாபாத்: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என குஜராத் காவல்துறையினரால் வர்ணிக்கப்பட்டு, இப்போது 13 பேரை போலி என்கவுண்டர்களில் கொன்று தீர்த்த கொலைகாரனாக மாறி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் குஜராத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி டி.ஜி.வன்சாரா.

போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லீம்களை சுட்டுக் கொன்றதாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டது, குஜராத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.

இவர்களில் ஒருவரான ராஜ்குமார் பாண்டியன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி. இன்னொரு முக்கியமான நபர் வன்சாரா.

வன்சாராவுக்கு குஜராத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயராம். இதுவரை 13 பேரை என்கவுண்டர் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளார் வன்சாரா. அதிலும் 2003ம் ஆண்டில் மட்டும் 7 பேரை போட்டுத் தள்ளியுள்ளார். அத்தனை பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

தற்போது சொரப்தீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீபி மற்றும் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்த விவகாரத்தில் சிக்கியுள்ள வன்சாரா, இதுவரை நடத்திய என்கவுண்டர்கள் அனைத்துமே போலியானவை என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

என்கவுன்டர்களுக்குப் பின்னர் கொல்லப்பட்ட 'தீவிரவாதிகளிடமிருந்து' பிடிபட்டதாக சில நாட்டுத் துப்பாக்கிகளை மேலிடத்தில் ஒப்படைத்துள்ளார் வன்சாரா.

வன்சாராவுக்கு பெரிய அளவில் அரசியல் தொடர்புகளும் உள்ளன. இதன் மூலம் இவர் ரூ.150 கோடிக்கு மேல் சொத்தும் சேர்த்து வைத்துள்ளார். இதுகுறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

வன்சாரா, குஜராத் மாநிலம் இலால் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தக் கிராமத்தில் உள்ள 12 ஆயிரம் மக்களில் 60 சதவீதம் பேர் முஸ்லீம்கள் ஆவர். சிறு வயதில் மிகவும் ஏழ்மையில் வாடியவர் வன்சாரா. அவரது பள்ளிப் படிப்புக்குக் கூட இந்தக் கிராமத்து மக்கள்தான் பணம் கொடுத்து உதவியுள்ளனராம்.

காரணம், வன்சாரா மட்டுமே அக்கிராமத்தில் படிப்பில் அதிக ஆர்வம் காட்டியவர். நமது கிராமத்தைச் சேர்ந்த ஒரு படிப்பார்வம் மிக்க சிறுவன் நன்கு படிக்கட்டும் என்ற ஆர்வத்தில் ஊரே சேர்ந்து வன்சாரவைப் படிக்க வைத்துள்ளது. முஸ்லீம்கள் அனைவரும் வன்சாராவை தங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்துள்ளனர்.

அதேபோல சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வன்சாரா தயாரானபோதும் கூட இக்கிராமத்து முஸ்லீம்கள்தான் பல வகையிலும் உதவியாக இருந்துள்ளனர். எந்த வன்சாராவை தங்களது பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்தார்களோ, எந்த வன்சாரா ஐபிஎஸ் அதிகாரியாக ஆனபோது பெருமைப்பட்டார்களோ அதே வன்சாராவால் இப்போது இலால் கிராமத்து முஸ்லீம்கள் பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

வன்சாராவின் தந்தை கோபார்ஜி வன்சாரா, கழுதை மேய்ப்பவராக இருந்துள்ளார். இலால் சஹாகரி மண்டலி உயர் நிலைப்பள்ளியில்தான் வன்சாரா படித்து வந்தார். அப்போது வகுப்பிலேயே முதல் மாணவராக விளங்கினார்.

11ம் வகுப்பு வரை அங்குதான் வன்சாரா படித்தார். வன்சாரா என்பது ஜாதிப் பெயராகும். வன்சாரா சார்ந்த ஜாதியினர் மொத்தமே 25 குடும்பங்கள்தான் இலால் கிராமத்தில் வசித்து வருகின்றனர். தற்போது போலி என்கவுண்டர் விவகாரத்தில் வன்சாரா சிக்கியுள்ளதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் உள்ளனர். வன்சாரா குடும்பத்தை இவர்கள் புறக்கணித்து, ஒதுக்கி வைத்துள்ளனர்.

வன்சாராவின் பள்ளித் தோழரும், வழக்கறிஞருமான நாதுபாய் படேல் கூறுகையில், வன்சாராவின் செயலால் நாங்கள் பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளோம். எங்களை வன்சாரா அவமானப்படுத்தி விட்டார்.

இளம் வயதில் மிகவும் வறுமையில் வாடிய குடும்பம் வன்சாராவின் குடும்பம். இக்கிராமத்து முஸ்லீம்கள் கொடுத்த பணத்தில்தான் வன்சாராவும், அவரது அண்ணனும் படித்தார்கள். ஆனால் இன்று அதே முஸ்லீம் சமுதாயத்தை வேட்டையாடி எங்களை கேவலப்படுத்தி விட்டார் வன்சாரா என்றார் ஆத்திரமாக.

வன்சாராவின் ஆசிரியரான ஹசன்பாய் கரீம்பாய் ஹோல்டா கூறுகையில், சிறு வயதில் வன்சாரா நன்கு படிக்கும் மாணவராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனது வீட்டிற்கு வந்து டியூஷன் படித்துச் செல்வார்.

11ம் வகுப்பை இங்கு முடித்து விட்டு வடோடராவில் மேல் படிப்பு படிக்கப் போனார். ஐபிஎஸ் முடித்து பணியில் சேர்ந்த பின்னர் அவர் கிராமத்தை மறந்து விட்டார்.

அவர் இன்று உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளதற்கு இந்தக் கிராமமும், இங்குள்ள அப்பாவி ஜனங்கள் செய்த தியாகமும், செய்த பண உதவிகளும்தான் காரணம். ஆனால் இவர்கள் குறித்து வன்சாரா கவலைப்படவே இல்லை, ஒதுக்கி வைத்து விட்டார். இன்றோ, இக்கிராமத்துக்கு பெரும் கெட்ட பெயரை ஈட்டித் தந்து விட்டார் என்றார் வேதனையுடன்.

இலால் கிராமம், எந்த வன்சாராவுக்காக பெருமைப்பட்டதோ, அதே வன்சாராவால் இன்று தலைகுனிந்து வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது. இதற்கிடையே சொரப்தீனின் மனைவி கெளசர் பீபியை இந்த போலி எண்கவுண்டர் கும்பல் ஒரு பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்து எரித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

நன்றிங்க

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அப்பாவிகளை கொன்று குவித்த - ஜாதி வெறிபிடித்த இந்த அதிகாரி காவல்துறைக்கே ஒரு இழுக்கு.

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்த நன்றி கெட்ட துரோகி.

Friday, April 27, 2007

மக்கள் பாவம், விட்டு விடுங்கள்!

போலீசாருக்கு ஜெயலலிதா மிரட்டல்!!!

ஏப்ரல் 27, 2007

சென்னை: தமிழக காவல்துறை செயல் இழுந்து, உருகுலைந்து விட்டது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக காவல்துறை மானிக் கோரிக்கை குறித்து சட்டசபையில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும் என திமுக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான அவசியம் இல்லை. ஏனென்றால் ஒரு உருக்குலைந்து போன, செயல்திறன் இழந்து விட்ட ஒர் அமைப்பை பற்றி விவாதித்து இனி ஆகப்போறதென்ன.

ஒரு மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது என்பது ஒரு துறை சார்ந்த நடவடிக்கை அல்ல. இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவு 355ன் கீழ் ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசால் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு அதை கண்காணிக்க வேண்டும். மாநில அரசு அதை செய்ய தவறினால் சட்டம் ஒழுங்கு சீர் கேடான மாநிலம் என்று கருதி அங்கு அரசியல் சட்டம் 356ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படும்.

இன்றைக்கு தமிழகத்தில் திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுக தான். இக்கட்சியின் பொறுப்பாளர்கள் திமுக குண்டர்களால் தாக்கப்பட்டும், வெட்டப்பட்டும், கொலை செய்யப்பட்டும், பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

ஆனால் திமுக உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் திடீர், திடீர் என முடிவுக்கு வந்துள்ளது. உதாரணத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அவர் நீதிமன்றத்திற்கு போகமாலே முடிவுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் வெடிமருந்து கலாச்சாரம் அதிகமாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பயங்கார வெடிவிபத்து. பொது விநியோகத்திற்காக அளிக்கப்படும் அரிசி, லாரி, லாரியாக தமிழகத்தில் உள்ள சோதனை சாவடிகள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டுகின்றன.

கள்ளச்சாராயம் குடிசைச் தொழிலாய் தமிழகமெங்கும் நடந்து வருகிறது. கிருஷ்ணாகிரி மாவட்டத்தில் நக்சலைட் நடமாட்டம் பகிரங்கமாக காணப்படுகிறது. வீரப்பனை ஒழித்துக்கட்டிய காட்டில் புதிய வீரப்பனை உருவாக்கி வருகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் நடத்த வன்முறை மூலம் சங்க காலத்து போர்களத்தை தத்ரூபமாக திமுகவினர் நடத்தி காட்டியுள்ளனர். இதற்கொல்லமாம் வெண்சாமரம் வீசிக் கொண்டு இருந்தது தமிழக காவல் துறை.

செயல் இழந்த ஒரு அமைச்சரவை மத்தியிலும் இருக்கின்றது. பயந்து நடுக்கி செயல்படும் நபர் தமிழகத்தின் ஆளுநராக இருக்கிறார். இதனால் எதைபற்றியும் கவலைப்படாமல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பாவர்கள் பொது மக்கள் தான்.

தமிழகத்திற்கு அருகில் உள்ள ஒரு அண்டை நாட்டில் ஒரு பயங்கரவாத இயக்கம் வான்வழி தாக்குதல் நடத்தும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளதும் திமுக ஆட்சியில் தான். அவர்களுக்கு வேண்டிய அனைத்து வெடிபொருட்கள், ராணுவ தளவாடப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்திலிருந்து கருணாநிதியின் ஆட்சியில் தடையின்றி செல்கின்றன.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு நடமாடும் பொம்மையாக காவல் துறை தலைமை இயக்குனர் இருந்து கொண்டிருக்கிறார். காவல் துறையினருக்கு மீண்டும் ஒரு முறை சொல்கின்றேன். கருணாநிதியின் சொல்லைக் கேட்டு மக்கள் விரோத பாணியில் செயல்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க வேண்டுடியிருக்கும்.

இந்த ஆட்சி விரைவில் முடிவிற்கு வந்து விடும். அப்போது மக்கள் விரோதியாக காவல் துறை நின்று விடக்கூடாது என்பதற்காக இதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

நன்றிங்க

அம்மா தாயே!?

முன்பு,

மாசம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய நீங்கள் 15.32 கோடி சொத்துக்களை வாங்கியதாக குற்றச்சாட்டு வழக்கு.

டான்சியிடமிருந்து 3.1 ஏக்கர் நிலமும் 2.698 சதுர மீ. கட்டிட பகுதியும் ஜெயா பப்ளிகேஷன் வாங்கியது. இந்த பேரத்தில் அரசு கல்லா பெட்டிக்கு 3.51 கோடி ரூபாய் நஷ்டம்.

பஞ்சாயத்துகளுக்காக கலர் டிவி பெட்டி வாங்கியதில் சந்தை விலையைவிட அதிகமாக ரூபாய் 14.500 வீதம் 45.302 கலர் பெட்டி அரசு வாங்கியது. இதில் 8.53 கோடி ரூபாய் கமிஷனாக நீங்கள் பெற்றது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்காக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் 117 கோடி கமிஷனுக்கு திட்டம் தீட்டியது.

பிறந்தநாள் பரிசாக ஒரு அனாமதேயரிடமிருந்து 3லட்சம் டாலர் பெற்றது.

இன்னும் சென்னையிலும் ஹைதராபாத்திலும் இருக்கும் உங்கள் வீடுகளை சோதனை போட்டதில் கொள்ளை கொள்ளையாக பணமும் 30கிலோ தங்கம் - 350 ஜோடி வளையல். 800 கிலோ வெள்ளி. 90க்கும் மேற்பட்ட கைக்கடியாரங்கள். 150 க்கும் மேற்பட்ட கலை பொருட்கள். விலையுயர்ந்த கற்கள். 10.000 புடவைகள். இறக்குமதி செய்யப்பட்ட 750 ஜோடி செருப்புகளும் கிடைத்தன மொத்த மதிப்பு ரூபாய் 58 கோடியாகும் என்று கணக்கிடபட்டிருந்தது.

இப்படி உங்கள் மீது பல வழக்குகள் இருந்தும் அப்போதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் சட்ட ஒழுங்குகள் உருக்குலைந்துதான் இருந்தது என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதிலே மக்கள் விரோதியாக காவல்துறை நின்று விடக்கூடாதுன்னு நீங்கள் சொல்வது தப்புங்க தாயே!?

வேணும்னா,

நீங்கள் ஆட்சியில் இல்லாமல் எதிர்கட்சியாக இருக்கும்போது அதிமுகவுக்கு விரோதமாக காவல்துறை நிற்க கூடாதுன்னு நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஆட்சியிலிருக்கும்போது திமுகவுக்கு விரோதமாக காவல்துறை நிற்க கூடாதுன்னு அவங்க சொல்லிக் கொள்ளட்டும்.

வீணாக,
மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் போல மாறி மாறி நீங்கள் அறிக்கை விடுவது உண்மையிலேயே சகிக்கவில்லையம்மா.

மக்கள் பாவம் அவர்களை விட்டு விடுங்கள் தாயே!?