Saturday, December 08, 2007

மோடி அரசை தூக்கி எறிய வேண்டும்.

மோடி அரசை தூக்கி எறிய வேண்டும்- பூரி சங்கராச்சாரியார்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007

டெல்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு தொடரக் கூடாது. மோடியை பதவியிலிருந்து தூக்கி எறிய மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் அதோக்சானந்த் தேவ தீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளதால் பாஜக பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சொராபுதீன் படுகொலை தொடர்பாக மோடி பேசிய பேச்சால் பாஜகவுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜகவின் வெற்றியை இது பாதிக்குமோ என்ற பயம் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பாஜகவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பூரி மடாபதி கிளம்பியுள்ளார். மோடியை பதவியிலிருந்து தூக்கி எறிய அனைத்து மதவாசத சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்று பூரி மடாதிபதி அதோக்சானந்த தேவ தீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மையினரை ஒடுக்கும் முயற்சியில் மோடி தீவிரமாக இறங்கி விட்டார்.

மோடி அரசின் நியாயமற்ற, இரக்கத்தனமர்ற செயல்கள், மத நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. இந்து சமுதாயத்தினரை பெரும் அவமானத்தில் தள்ளி விட்டுள்ளது.

இந்துக்களின் நலம் விரும்பி, இந்துக்களைக் காக்க அவதரித்தவர் என்று கூறப்பட்ட மோடியால், இந்துக்கள் இன்று தலை குணிந்து நிற்கின்றனர்.

நந்திகிராம் போன்ற விவாகரங்களில் அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து நிற்கின்றனர். ஆனால் அதற்குப் பதிலாக, மோடிக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும். மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து விட்டு கை கோர்க்க வேண்டும். மோடி அரசை தூக்கி எறிய அனைவரும் முன்வர வேண்டும். அவருக்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

இந்து அமைப்புகள் மோடி விவகாரத்தில் இரட்டை நிலையை மேற்கொள்ளக் கூடாது. மோடி மீது அவர்களுக்கு அதிருப்தி இருந்தால் அதை வெளிப்படையாக தெரிவித்து அவருக்கு எதிராக செயல்பட முன்வர வேண்டும்.

பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டும் கூட மோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவியில் நீடித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இப்போது குஜராத் மக்களுக்கு சரியான நேரம் வந்துள்ளது. மோடியை விரட்ட இதுதான் சரியான நேரம். அனைவரும் ஒருங்கிணைந்து மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பூரி சங்கராச்சாரியார்.

பாஜகவுக்கு தீவிர ஆதரவு தருபவர்களில் ஒருவரான பூரி சங்கராச்சாரியார் மோடிக்கு எதிராக இவ்வளவு கடுமையாக கருத்து தெரிவித்துள்ளதால் பாஜக தரப்பு ஆடிப் போயுள்ளது.

நன்றிங்க

இப்படி எல்லாரும் மூதியை போட்டு தாக்குனா அந்த ஆளு என்னதாஞ் செய்வாரு!

Wednesday, December 05, 2007

வேப்ப மரத்தில் வடிந்த பால்...

வேப்ப மரத்தில் வடிந்த பால் - மக்கள் பரவசம், பூஜை

வியாழக்கிழமை, டிசம்பர் 6, 2007

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், மக்கள் பரவசம் அடைந்தனர், மரத்திற்கு மஞ்சள் ஆடை கட்டி பூஜைகள் செய்து, பாலையும் பிடித்துச் சென்றனர்.

ஒட்டசத்திரம் அருகேயுள்ள சிந்தலப்பட்டி ராமநாராயணன் என்பவரது தோட்டத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் திடீரென பால் வடிய தொடங்கியது.

இது பற்றி தகவல் அறிந்ததும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அந்த மரத்தை பார்க்க திரண்டு வந்தனர். மரத்திற்கு மஞ்சள் ஆடை கட்டி பூஜைகள் நடத்தினர்.

மரத்தில் வடியும் பாலை பீரோவில் வைத்து பூஜை செய்தால் பல கோடி ரூபாய்க்கு அதிபதியாகலாம் என்ற தகவலும் பரவியதால் பலர் போட்டி போட்டு பாலை பிடித்து செல்ல முண்டியத்தனர். இதில் ஒரு பெண் காயம் அடைந்தார்.

நன்றிங்க

வேப்பம்பால் வியாபாரம் நல்லா சூடு பிடிக்குமே!

பின்னே, கோடீஸ்வரராக்கும் அதிஷ்ட பால் ன்னா சும்மாவா!

பால் வடியும் வேப்பமரத்தை அரசாங்கம் கைப்பற்றினால் இந்தியா வாங்கிய கடனை அடைத்து விடலாமே..!

என்ன நாஞ்சொல்றது...?

Tuesday, December 04, 2007

ஒட்டகப்பால் குடித்தால் நீரழிவு நோய் வராது.

ஒட்டகப்பால் குடித்தால் நீரிழிவு நோய் வராது
ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு


கொல்கத்தா, டிச.3-

ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதன் காரணமாக நீரிழிவு நோயால் அவதிப்படுவோருக்கு ஒட்டகத்தின் பால் சிறந்த மருந்து என்று ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் நீரிழிவு நோய் பிரிவு தலைமை டாக்டர் ஆர்.பி.அகர்வால் தெரிவித்து உள்ளார்.

கடந்த 7 வருடங்களாக நீரிழிவு நோய் பற்றியும், அதற்கான மருந்துகள் பற்றியும் இவர் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த வருடம் முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து ஒட்டகப்பால் நீரிழிவு நோயை குணப்படுத்துவது பற்றி ஆராய்ச்சி நடத்தி வந்தார். இதில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒட்டகப் பால் பெருமளவில் குறைப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கொல்கத்தாவில் இந்திய நீரிழிவு நோயாளிகளுக்கான ஆராய்ச்சி சங்கம் நடத்திய விழாவில் கலந்து கொண்ட டாக்டர் அகர்வால் இந்த தகவலை வெளியிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகப்பால் அருந்தும் மக்களுக்கு நீரிழிவு நோய் வருவதில்லை என்றும் அவர் அப்போது கூறினார்.

ஜெய்பூர், ஜெய்சால்மர், பிகானீர் ஆகிய பகுதிகளில் வழக்கமாக ஒட்டகப்பால் அருந்தும் 2 ஆயிரம் பேரிடம் ஆராய்ச்சி மேற்கொண்டதில் அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இயல்பான நிலையிலேயே இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார். இதைத் தொடர்ந்து ஒட்டகப்பாலை பவுடராக தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றிங்க

நீரழிவு நோய் உள்ளவர்களெல்லாம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு குடியேற வேண்டியதுதான்.