Wednesday, January 31, 2007

இஸ்லாத்தை அழிக்க பால்தாக்கரே!!!

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து இஸ்லாத்தை அழித்தொழிக்க வேண்டும் - பால்தாக்கரே

புதன், 31 ஜனவரி 2007

மொழி மற்றும் மாநில வேறுபாடுகளை மறந்து நாடுமுழுவதும் ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவ்வாறு ஒன்றிணைந்தால் மட்டுமே இஸ்லாத்தை இந்தியாவில் இருந்து ஒழிக்க முடியும் என்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார்.

மேலும் ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானம் தான் தன்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் தாக்கரே கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்திருந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, கட்சியின் பலமான இருதூண்களான அவரின் இரு மகன்களும் சிவசேனாவிலிருந்து விலகிய பின்பு தனது முடிவை மாற்றிக் கொண்டு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

சிவாஜி பார்க்கில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசும் பொழுது மேற்கண்டவாறு ஹிந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அக்கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை லட்சியத்தில் உறுதியான ஹிந்து என்றும் சிலாகித்துப் பேசினார். இந்த பேரணியில் வாழ்த்துரை வழங்க நரேந்திரமோடியும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையில் தாணேயில் நடந்த மற்றொரு பேரணியில் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை தனிப்பட்ட முறையில் அவர் செய்த விமர்சனத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றவாளி எனக்கருதப்படும் முஹம்மத் அஃப்ஸல் குருவிற்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது சட்டத்தை அவமதிக்கும் செயல் என்று குடியரசுத்தலைவருக்கு எதிராக குற்றம்சாட்டிய தாக்கரே தொடர்ந்து தன்னிடம் பரிசீலனைக்கு வந்த அஃப்ஸல் குருவின் கருணைமனுவை அவர் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

தனது தலையில் இருக்கும் பெருமளவு முடியின் காரணமாக கருணைமனுவில் அடங்கியுள்ள உள்ளடக்கத்தை கலாமால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லையா? என்று அவரை நையாண்டி செய்த தாக்கரேயின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் குற்றம் கூறியது.

தாக்கரே நாட்டைத் துண்டாட முயல்வதாக முதிர்ந்த காங்கிரஸ் தலைவரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான அம்பிகா சோனி கண்டனம் தெரிவித்தார். தாக்கரேயின் இந்த விமர்சனம் பைத்தியக்காரத்தனமானதும் தள்ளப்படவேண்டியதுமாகும் என NCP தலைவர் ஷரத்பவாரும் கூறியுள்ளார். குடியரசுத்தலைவர் என்பவர் ஒரு தனிமனிதன் அல்லர் என்றும் அவர் இந்நாட்டின் தலைமைக் குடிமகன் என்றும் CPM தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

இந்திய இறையாண்மையின் கீழ் வசிக்கும் எவரும் அப்பதவியை மதிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார். தாக்கரேயின் கலாமுக்கு எதிரான இந்த விமர்சனத்தை அவரின் தனிப்பட்ட கருத்து என BJP தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார். அஃப்ஸல் குருவின் தண்டனையை தாமதப்படுத்துவதற்கு எதிராக தனது எதிர்ப்பை தாக்கரே வெளிப்படுத்தியதாகத் தான் கருதுவதாகவும் நாயுடு கூறினார்.

தேசிய அளவில் சர்ச்சைக்கு இடமளிக்கும் விதத்தில் தாக்கரே வெளிப்படுத்தி இருக்கும் இஸ்லாத்தை அழிக்க ஹிந்து ஒற்றுமை, ஹிந்துக்களின் ஹிந்துஸ்தான், குடியரசுத்தலைவருக்கு எதிரான விமர்சனம் போன்றவை அவரின் கட்சியை தேசிய அளவில் வளர்த்து எடுக்க முயலும் அவரின் அடுத்த கட்ட நாடகத் தந்திரமாகவே கருதப்பட வேண்டியுள்ளது. சிவசேனாவின் ஆரம்பகால கொள்கை மும்பையையும் பின்னர் மஹாராஷ்டிரா மாநில வளர்ச்சியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. மஹாராஷ்டிர மாநிலத்தவர்கள் தவிர மற்ற அனைவரும்
அம்மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்து, ஹிந்துக்கள் உட்பட இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களுக்கு எதிராக படுபயங்கர அநியாயங்களை கட்டவிழ்த்து விட்டு சிவசேனா வளர்ந்த வரலாறு உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அன்று சிவசேனா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே மஹாராஷ்டிர மாநிலத்தவர்களை தவிர, ஹிந்துக்கள் உட்பட மற்றவர்களை மஹாராஷ்டிராவிலிருந்து அடித்து விரட்டப்படுவதற்காகவே என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும். இன்று அதே சிவசேனாவின் தலைவர் தனது கட்சியின் கொள்கைக்கு எதிராக மொழி-பிரதேச எல்லைகளை மறந்து ஹிந்துக்கள் இஸ்லாத்தை அழிக்க ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்திருப்பது அரசியல் நோக்கர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றிங்க

அமைச்சர் அம்பிகா சோனி சொன்ன மாதிரி பால்தாக்கரேயின் விமர்சனம் பைத்தியக்காரத்தனந்தான். பைத்தியக்காரர் பத்தும் சொல்வார் இது பால்தாக்கரேயிக்கு பொருத்தமாவே இருக்கு.

ஒரு பேச்சுக்கு, இஸ்லாத்தை அழிக்க என்றே ஹிந்துக்கள் ஒன்று பட்டால், முஸ்லிம்கள் என்ன புளியங்கா பறிச்சிக்கிட்டா இருப்பாங்க...?

Monday, January 22, 2007

நீதிமன்றத்தின் தலாக் தீர்ப்பு

முஸ்லிம்கள் விவாகரத்து செய்துகொள்ள தலாக் என்று கூறுவது மட்டும் போதாது: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை, ஜன. 22: முஸ்லிம் ஒருவர், தனது மனைவியை விவாகரத்து செய்வதற்காக தலாக் என்று மூன்று முறை கூறுவது மட்டும் போதாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலாக் கூறுவதற்கு முன்னதாக, விவாகரத்து செய்வதற்கான காரணத்தை நடுவர் முன்னிலையில் கூற வேண்டும். பின்னர், நடுவர் மூலமாக தம்பதிகளை சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் தில்ஷாத் பேகம். இவரது கணவர் அகமத்கான் பதான்.

கடந்த 1989-ம் ஆண்டில் அகமத்கான், மனைவி தில்ஷாத் பேகத்தை தனியே விட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். இதையடுத்து, தனக்கு பராமரிப்புக்காக மாதந்தோறும் பணம் அளிக்குமாறு அகமத்கானுக்கு உத்தரவிடக் கோரி மேற்கு மகாராஷ்டிராவிலுள்ள பாரமதி நீதித்துறை நடுவர் முன் மனு தாக்கல் செய்தார் தில்ஷாத் பேகம்.

இம்மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர், "தில்ஷாத்துக்கு பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.400-யை அகமத்கான் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த 1994, மே மாதம் உள்ளூர் மசூதியில் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தலாக் என்று கூறி தில்ஷாத்தை விவாகரத்து செய்தார் அகமத்கான். பின்னர், தில்ஷாத்துக்கு விவாகரத்து செய்துவிட்டதாக நோட்டீஸ் அனுப்பினார்.

முஸ்லிம் சட்டப்படி விவாகரத்து செய்தபின்னர் பராமரிப்புக்காக பணம் அளிக்க வேண்டியதில்லை என்று நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் அகமத்கான். இதைவிசாரித்த நீதிபதி, பராமரிப்புக்காக மாதந்தோறும் பணம் அளிக்குமாறு விடுத்த உத்தரவை ரத்து செய்தார்.

இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் தில்ஷாத். இதைவிசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மார்பல்லே, முஸ்லிம் சட்டப்படி தலாக் என்று கூறுவது ஏற்கக்கூடியதா என்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் தனது உத்தரவில் கூறியது:

முஸ்லிம் ஒருவர் விவாகரத்து செய்வதற்கான காரணத்தை கூறுவதற்காக, நடுவர் ஒருவரை நியமித்து அவர் முன்னிலையில் தம்பதிகளுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்த முயல வேண்டும். இது முடியாத பட்சத்தில், தலாக் கூறி விவாகரத்து செய்துகொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

நன்றிங்க

தலாக் சொல்ல காரணங்கள் தேவை இல்லை. இதை நீக்கி விட்டால்... உயர் நீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்பு!

(கணவன், மனைவி ஆகிய) அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவனுடைய குடும்பத்ததாரில் ஒரு நடுவரையும் அவளுடைய குடும்பத்தாரில் ஒரு நடுவரையும் அனுப்பி வையுங்கள். அவ்விருவரும் நல்லிணக்கத்தை நாடினால் அல்லாஹ்வும் அவ்விருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் மிகவும் அறிந்தவனாகவும் நன்குணர்ந்தவனாகவும் இருக்கிறான். [அல்குர்ஆன் 4:35]

Wednesday, January 10, 2007

வாழ்க உலக மகா சண்டியர்.

மொகாதிஷ்: தெற்கு சோமாலியாவில் இஸ்லாமிய போராளிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய விமானத்தாக்குதலில் எண்ணற்றோர் மரணமடைந்ததாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. 1998 ல் கெனியா, தான்சானியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களோடு தொடர்புடைய அல்காயிதா போராளிகளுக்கு இஸ்லாமிய போராளிகள் இயக்கம் அடைக்கலம் கொடுத்தது என்ற காரணத்தினால் அமெரிக்கா இந்த விமானத்தாக்குதல்களை நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் பெண்களும் குழந்தைகளும் உட்பட கணக்கில்லாத மனித உடல்கள் அப்பிரதேசத்தில் சிதறிக் கிடப்பதாக அரசு அதிகாரி வெளிப்படுத்தினார். அமெரிக்க விமானப்படைகளோடு எத்தியோப்பிய விமானம் தாங்கிக் கப்பல்களும் இத்தாக்குதலில் பங்கெடுத்திருந்தன.

1993 ல் சமாதானம் ஏற்படுத்துவதற்கு என்ற பெயரில் மொகாதிஷில் வந்திறங்கிய அமெரிக்கப்படைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்விக்குப்பின், நீண்ட 13 வருடங்களுக்குப் பிறகு சோமாலியாவில் அமெரிக்கா இராணுவ தலையீடு செய்வது இது முதல் முறையாகும். அல்காயிதாவின் கிழக்கு ஆப்ரிக்க ஏஜண்ட் என்று அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ கருதும் அபூ தல்ஹா அல் சூடானிக்கு இஸ்லாமிய போராளிகள் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

இத்தாக்குதலில் வெடிகுண்டு நிபுணரான அல் சூடானி கொல்லப்பட்டதாக வந்த செய்தியை பெண்டகன் இதுவரை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ செய்யவில்லை.

ஒரு போராளியும் உயிரோடு இல்லை என்று உறுதியாக தெரியும் வரை தாக்குதல் தொடரும் என சோமாலியா இடைக்கால அரசின் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் அலி அஹ்மத் ஜம கூறினார். சோமாலியாவில் அமெரிக்க விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதை பெண்டகன் அதிகாரி ப்ரயன் விட்மேன் உறுதி செய்தார். அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான ஐஸனோவர் சோமாலிய கடற்கரையை குறிவைத்து நகர்ந்ததாக பெஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க கப்பல்படையின் தலைவர் உறுதிப்படுத்தினார்.

அல்காயிதாவின் பெயரில் சோமாலியா இஸ்லாமிய போராளிகளை தாக்குவதாகக் கூறிக் கொண்டு அப்பாவிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றுமொரு களத்தை உருவாக்கியிருப்பதை, மொகாதிஷ் வீதிகளில் சிதறிக் கிடக்கும் குழந்தைகள், பெண்களின் உடல்கள் வெளிப்படுத்துகின்றன.

நன்றிங்க

பட்டினியால் குற்றுயிராயிருக்கும் மக்கள் சங்கடப்படாமல் பரலோகத்துக்கு செல்ல தாராளமாகவே உதவுகிறது வல்லரசு! வாழ்க உலக மகா சண்டியர்.