Saturday, December 16, 2006

பெண்ணாகப் பிறந்தவள்...

குழந்தை பெற்றார் 9-ம் வகுப்பு மாணவி

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9-ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவி, வியாழக்கிழமை ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

குடியாத்தம் செதுக்கரையைச் சேர்ந்த, கணவனால் கைவிடப்பட்ட கூலித் தொழிலாளியின் மகள் இந்த மாணவி; வீட்டருகே வசிக்கும் இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். (தாய், மகள் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)

இந்நிலையில், புதன்கிழமை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இம் மாணவி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 2.7 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது.

காதல், கர்ப்பம் குறித்து தாயும் மகளும் யாருடனும் பேச மறுத்து வருகின்றனர். போலீஸில் புகார் கொடுப்பீர்களா, காதலனுடன் வாழ அனுமதிப்பீர்களா என்று கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் சொல்லவில்லை.

மிரட்டப்பட்டுள்ளார்களா என்று கேட்டதற்கும் பதில் சொல்லத் தயங்குகின்றனர்.

நன்றிங்க

பெண்ணாக பிறந்தவள் பெண் என்று உடற்கூறு பாலின வேறுபாடு கொண்டவளாகப் பார்க்கப்படுவதில்லை. அழகு சுகம் மென்மை இப்படித்தான் பார்க்கப்படுகிறாள். அதன் அவலம்தான் அன்றாட செய்திகளில் படிக்க முடிகிறது. 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றாள் என்பது அதிசயமில்லை. பெண்கள் பருவமடைந்தால் குழந்தை பெறும் தகுதியை அடைகிறார்கள். வீரம் வலிமை வேகம் என்ற போலி வக்கிரங்களுக்கு மெளனமாக இரையாகி விடுகிறார்கள்.

இரட்டைத் தீர்ப்புகள்.

கேரளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஜே.பி யைச் சேர்ந்த (யுவமோர்ச்சா) ஜெயகிருஷ்ணன் என்னும் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். அதன் பேரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு விசாரணை நீதி மன்றமும் மேல் முறையீட்டில் உயர்நீதி மன்றமும் தூக்குத் தண்டனை விதித்திருந்தன.

உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் நால்வரது தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப் பட்டு விடுதலை செய்யப் பட்டனர். மற்றொரு தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆயுள் தண்டனையாகத் தண்டனை குறைக்கப் பட்டது.

கீழ் நீதி மன்றமும் கேரள உயர்நீதி மன்றமும் வழங்கிய தூக்குத் தண்டனை, காவல் துறையின் கதையைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பியதால் ஏற்பட்ட அல்லது திட்டமிட்ட நிகழ்வு. இதை உச்ச நீதிமன்றம் சரியான கண்ணோட்டத்தில் அணுகியதால் ஐவரும் உயிர் தப்பினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வழக்கில் காவல்துறை வழக்குப் புனைந்ததில் "ஒப்பிச்ச தரிகிட பரிபாடிகளை"த் தோலுரித்துக் காட்டிக் காவல் துறையைக் கண்டித்தனர். மேலும் பொய் சாட்சி சொன்ன ஆசிரியர் ஒருவரையும் கண்டித்தனர். பள்ளி மாணவர்கள் அளித்த சாட்சியத்தைக் கணக்கில் கொண்டு நால்வரை விடுதலை செய்தனர்.

(அப்ஸல் வழக்கிலும் இந்தக் கதைதான் நடந்திருக்குமோ?)


இதே செய்தியை 'தினமலரும்' பிரசுரித்துள்ளது கீழே:-

கேரள குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை "ஆயுளாக' குறைப்பு.

புதுடில்லி: கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் தொண்டர் ஒருவருக்கு கொலை வழக்கில் அளிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் ஜெய் கிருஷ்ணன் என்ற பள்ளி ஆசிரியர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டரான பிரதீபன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இது தவிர மேலும் நான்கு பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கை விசாரித்த கீழ் கோர்ட்டுகள் ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்தன. கேரள ஐகோர்ட்டும் ஐந்து பேர் மீதான மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி.சின்கா மற்றும் மார்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், பிரதீபனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இது தவிர மீதி நான்கு பேரும் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
------------------------

மரண தண்டனை என்பது ஒரு மனிதனின் உயிர் போகிற சமாச்சாரம். உயிர் போனால் போனதுதான் போன உயிரை திரும்ப கொண்டு வர முடியாது அதில் எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

நீதித்துறை கனவான்களே ஒரு வழக்கை ஒரு தடவைக்கு நாலு தடவை விசாரியுங்கள். ஏன் நாப்பது தடவையும் விசாரியுங்கள். ஒரு வருஷத்துக்கு பல வருஷம் விசாரணை செய்யுங்கள். ஆனா தீர்ப்பு மட்டும் ஒரு தீர்ப்பா இருக்கட்டும். (இத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? எல்லாம் தமிழ் மக்களிடம் கேட்டதுங்க.)

Wednesday, December 13, 2006

வசதியாக மறைத்தல்

பாபுஜி எழுதிய இருளும் மருளும் நேச குமாருக்கு - சில வரிகள் என்ற திண்ணை கடிதத்தில் நேச குமார் என்ற இஸ்லாமோஃபோபிக் நபருக்கு இரண்டு கேள்விகளை வைத்திருந்தார். அதுக்கு விளக்கமாக இஸ்லாமோஃபோபிக் நபர் அபூ சுஃப்யான் பற்றிய விளக்கத்தை மழுப்பலாக சொல்லிட்டு அபூ சுஃப்யானின் மனைவியை பற்றிய கேள்வியை வசதியாக மறைத்து விட்டார்.

Thursday November 16, 2006

இருளும் மருளும் நேச குமாரும் - சில வரிகள்!

பாபுஜி

இருளும் மருளும் இஸ்லாமும்" என்ற தலைப்பில் எனக்கு சில வரிகளை நேச குமார் என்ற பெயரில் யாரையோ, எதையோ சொக்க வைக்கும் உத்வேகத்தில் எழுதி வருகிற இஸ்லாமோஃபோபிக் நபர் கடந்த 19 அக்டோபர் அன்று எழுதியதை இன்று தான் பார்க்க முடிந்தது.

தனிப்பட்ட முறையில் நான் அவர் மீது விமர்சனம் செய்திருப்பதாகச் சொல்கிறார். நான் சொன்னது 'இஸ்லாமோஃபோபிக் ' என்பதைத் தான். அதுகூட ஏளனமான தொனியில் இணைய முஸ்லிம் எழுத்தாளர்களை அவர் 'இஸ்லாமிஸ்ட்' என்று சொல்லிவருவதை உணர்த்தத் தான். இஸ்லாமிஸ்ட் என்ற வார்த்தை என்னளவில் கேவலமில்லை என்றாலும், நேச குமார் உபயோகிக்கிற தொனி எல்லோரும் அறிந்தது தானே!

ஆனால், கோடானுக்கோடி முஸ்லிம்களின் உணர்வுகளை தன் பேனாவின் முனையால் குத்திக் கூறுபோடத் துடிக்கிற இந்த நபரை குறித்து யாரும் எதுவும் சொல்லக்கூடாதாம் . சேனிட்டியாம்.

நேச குமார் ஒரு பார்ப்பனர் என்பதும், பார்ப்பனீயப் பித்தர்களால் (மனித நேயமிக்க நல்ல பார்ப்பனர்கள் மன்னிக்கவும்) ஆதிக்கப்பறிப்புகளைத் தாங்கிக்கொள்ள மாட்டாத நிலையில், காழ்ப்புணர்வின் ஒரு செயலாகவே அவருடைய இஸ்லாம் குறித்த விமர்சனங்களும் இருக்கின்றன என்பதும் இன்றைக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்பட்டு விட்ட நிலையில், இன்னும் எத்தனைக் காலத்துக்கு தான் ஒரு பிற்படுத்தப்பட்டவன் என்ற பொய்யை தொடர விரும்புகிறார் என்பதை தெளிவுபடுத்தட்டும் .

நேச குமார் என்ற பெயரில் எழுதுகிற அந்த நபர் தொடர்ந்து சொல்வதெல்லாம் இஸ்லாம் மீதான அவருடைய உன்மத்தங்களையே!.

கடும் விரோதிகளாயிருந்த பகைவர்கள் மீது வெற்றி வாய்ப்பு கிடைக்கும்போது பழிதீர்த்துக்கொள்ளவே முனைகிற மனிதர்களிடையே, அப்போதும் ஓரிறையை ஏற்கவைத்த; சொந்தப் பகைமைகளை மறந்து மன்னித்த; வரலாற்றில் பதிவான மாபெரும் மன்னிப்பை காழ்ப்புணர்வின் காரணத்தால் திரித்தும் மறுத்தும் சொல்ல, நல்லவேளை நான் உங்களைப்போன்ற கடும்காஃபிரில்லை நேச குமார் அவர்களே . (இப்போதும் ஒரு முஸ்லிமாக, உங்களை காஃபிர் என்று சொல்வதனை நான் விரும்பவில்லை . நாளையே உங்கள் நிலை மாறக்கூடும். ஆயினும் நீங்கள் இஸ்லாமோஃபோபிக் என்று சொல்வதை விடவும் காஃபிர் என்று சொல்வதை விரும்புவீர்கள் என்பதால் சொல்கிறேன் ).

அதே அபூ சுஃப்யான் அவர்களின் மனைவியாகவும், நபியவர்களின் நேசத்திற்குரிய சிறியதந்தையைக் கொன்று ஈரலைக் கடித்துத் துப்பியவருமான -ஹிந்த் அவர்களையும் இஸ்லாத்தின் பொருட்டால் மன்னித்து, அதே -ஹிந்த் அவர்களால் "இறைத்தூதர் அவர்களே ! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபிறகு) இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது" என்று நேற்றைய எதிரிகளாலும் பாராட்டுப்பெற்ற நபியவர்களை சுய வன்மத்தின்; சுயநலத்தின் காரணமாகவே ஏற்காதிருக்க நான் நல்லவேளை, உங்களைப்போல ஆதிக்க சாதியிலில்லை நேச குமார் அவர்களே!

இருள் மருள் காரணமாகவே, முஸ்லிம்கள் இஸ்லாத்தினை விட்டு விலகாதிருக்கிறார்கள் என்று 'கண்டுபிடித்து' வைத்திருக்கும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

ஹிந்து மதம் நெகிழ்ச்சித் தன்மை உடையது என்று சொல்கிறீர்களே, பிராமணீய மதத்தவர்களால் ஏன் இன்னும் வர்க்கபேதத்தின் வரையறையாய் விளங்கும் பூணூலைத் தாண்டி வரமுடியவில்லை? பதில் சொல்வீர்களா? நன்றி.