Wednesday, January 10, 2007

வாழ்க உலக மகா சண்டியர்.

மொகாதிஷ்: தெற்கு சோமாலியாவில் இஸ்லாமிய போராளிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய விமானத்தாக்குதலில் எண்ணற்றோர் மரணமடைந்ததாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. 1998 ல் கெனியா, தான்சானியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களோடு தொடர்புடைய அல்காயிதா போராளிகளுக்கு இஸ்லாமிய போராளிகள் இயக்கம் அடைக்கலம் கொடுத்தது என்ற காரணத்தினால் அமெரிக்கா இந்த விமானத்தாக்குதல்களை நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் பெண்களும் குழந்தைகளும் உட்பட கணக்கில்லாத மனித உடல்கள் அப்பிரதேசத்தில் சிதறிக் கிடப்பதாக அரசு அதிகாரி வெளிப்படுத்தினார். அமெரிக்க விமானப்படைகளோடு எத்தியோப்பிய விமானம் தாங்கிக் கப்பல்களும் இத்தாக்குதலில் பங்கெடுத்திருந்தன.

1993 ல் சமாதானம் ஏற்படுத்துவதற்கு என்ற பெயரில் மொகாதிஷில் வந்திறங்கிய அமெரிக்கப்படைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்விக்குப்பின், நீண்ட 13 வருடங்களுக்குப் பிறகு சோமாலியாவில் அமெரிக்கா இராணுவ தலையீடு செய்வது இது முதல் முறையாகும். அல்காயிதாவின் கிழக்கு ஆப்ரிக்க ஏஜண்ட் என்று அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ கருதும் அபூ தல்ஹா அல் சூடானிக்கு இஸ்லாமிய போராளிகள் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

இத்தாக்குதலில் வெடிகுண்டு நிபுணரான அல் சூடானி கொல்லப்பட்டதாக வந்த செய்தியை பெண்டகன் இதுவரை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ செய்யவில்லை.

ஒரு போராளியும் உயிரோடு இல்லை என்று உறுதியாக தெரியும் வரை தாக்குதல் தொடரும் என சோமாலியா இடைக்கால அரசின் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் அலி அஹ்மத் ஜம கூறினார். சோமாலியாவில் அமெரிக்க விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதை பெண்டகன் அதிகாரி ப்ரயன் விட்மேன் உறுதி செய்தார். அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான ஐஸனோவர் சோமாலிய கடற்கரையை குறிவைத்து நகர்ந்ததாக பெஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க கப்பல்படையின் தலைவர் உறுதிப்படுத்தினார்.

அல்காயிதாவின் பெயரில் சோமாலியா இஸ்லாமிய போராளிகளை தாக்குவதாகக் கூறிக் கொண்டு அப்பாவிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றுமொரு களத்தை உருவாக்கியிருப்பதை, மொகாதிஷ் வீதிகளில் சிதறிக் கிடக்கும் குழந்தைகள், பெண்களின் உடல்கள் வெளிப்படுத்துகின்றன.

நன்றிங்க

பட்டினியால் குற்றுயிராயிருக்கும் மக்கள் சங்கடப்படாமல் பரலோகத்துக்கு செல்ல தாராளமாகவே உதவுகிறது வல்லரசு! வாழ்க உலக மகா சண்டியர்.

1 comment:

மரைக்காயர் said...

//பட்டினியால் குற்றுயிராயிருக்கும் மக்கள் சங்கடப்படாமல் பரலோகத்துக்கு செல்ல தாராளமாகவே உதவுகிறது வல்லரசு! வாழ்க உலக மகா சண்டியர்.//

:-(